ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்..! கிணற்றுக்குள்ளே பாய்ந்த கரண்ட்… அலற அலற பெண்ணைத் தூக்கி வீசிய அண்டை வீட்டார்..! மத்தியப் பிரதேசத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்..! கிணற்றுக்குள்ளே பாய்ந்த கரண்ட்… அலற அலற பெண்ணைத் தூக்கி வீசிய அண்டை வீட்டார்..! மத்தியப் பிரதேசத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாமோர்குர்த் கிராமத்தில், கிணற்றில் மின்சாரம் பாய்ச்சியதைத் தட்டிக் கேட்ட பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ராம்தேவி அகிர்வாரின் கணவர் ரமேஷ்வர் தெரிவிக்கையில், ‘உர் திட்டம்’ காரணமாக அவர்களின் பழைய நிலம் நீரில் மூழ்கியதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாமோர்குர்த் கிராமத்தில் புதிய நிலம் வாங்கி வசிக்கத் தொடங்கினர். இந்த நிலத்தில் உள்ள கிணறு தான் அவர்களின் குடும்பத்திற்கு முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்துள்ளது.

ஆனால், அவர்களின் அண்டை வீட்டாரான கோவிந்த் கோலி என்பவர் அந்த கிணற்றை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டு, அக்குடும்பத்தைப் பயமுறுத்துவதற்காக ஏற்கனவே பலமுறை கிணற்று நீரில் மின்சார வயர்களைப் போட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று ராம்தேவி கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, கிணற்றுக்குள் மின்சார வயர்கள் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த ஆபத்தான செயலைக் கண்டு அவர் கோவிந்திடம் முறையிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்த் கோலி, ராம்தேவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தூக்கி கிணற்றுக்குள் தள்ளியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரைப் போராடி மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனிடையே, கானியாதானா காவல் நிலைய போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கோவிந்த் கோலி மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in