“அன்னைக்கு ஏன் தடுக்கல…? 6 வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச தப்பு..” புல்லட்டில் வந்து தாத்தாவை கிரிக்கெட் மட்டையால் போட்டுத் தள்ளிய பேத்தி..! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அன்னைக்கு ஏன் தடுக்கல…? 6 வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச தப்பு..” புல்லட்டில் வந்து தாத்தாவை கிரிக்கெட் மட்டையால் போட்டுத் தள்ளிய பேத்தி..! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஏரோட்ரோம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 வயது பெண் ஒருவர், தனது 70 வயது தாத்தாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். காவல்துறையினரிடம் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில், சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தா தன்னிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் அத்துமீறல் (ரேப்) செய்ததாகவும், அந்தச் சம்பவத்தால் தான் நீண்டகாலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தாத்தா மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று இரவு அந்தப் பெண் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர், ‘இரவு நேரத்தில் வெளியே சுற்றுவது பாதுகாப்பற்றது, ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடும்’ என்று கூறி அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட்ட அந்தப் பெண், “தாத்தா எனக்குத் தீங்கு விளைவித்தபோது குடும்பத்தினர் யாரும் எதுவும் செய்யவில்லை, இப்போது மட்டும் ஏன் எனக்கு அறிவுரை கூறுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் கடும் கோபத்துடன் வீட்டிலிருந்து கிளம்பிய அவர், புல்லட் பைக் மற்றும் கிரிக்கெட் மட்டையுடன் தனது தாத்தாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

Advertisement

தாத்தாவின் வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், அங்கு இருந்த 70 வயது தாத்தாவின் தலையில் கிரிக்கெட் மட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற பாட்டி மீதும் அந்தப் பெண் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாட்டி அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, பேத்தியைக் கைது செய்தனர். தாத்தா மீது சுமத்தப்பட்டுள்ள 6 வருடங்களுக்கு முந்தைய பாலியல் குற்றச்சாட்டு குறித்தும், இந்தக் கொலை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது ஆத்திரத்தில் நடந்ததா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in