“பயப்படாதீங்க, எங்களுக்கும் சகோதரிகள் இருக்காங்க..!” 1 மணி நேரம் வீட்டிலேயே இருந்து நகை, பணத்தை அள்ளிச் சென்ற முகமூடி கும்பல்.. ஆனா பெண்களைப் பார்த்துக் கொள்ளையர்கள் சொன்ன வார்த்தையால் அதிர்ந்த குடும்பம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பயப்படாதீங்க, எங்களுக்கும் சகோதரிகள் இருக்காங்க..!” 1 மணி நேரம் வீட்டிலேயே இருந்து நகை, பணத்தை அள்ளிச் சென்ற முகமூடி கும்பல்.. ஆனா பெண்களைப் பார்த்துக் கொள்ளையர்கள் சொன்ன வார்த்தையால் அதிர்ந்த குடும்பம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் கோமதிநகர் பகுதியில், ரியல் எஸ்டேட் வியாபாரி வீட்டில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த 7 பேர் கொண்ட முகமூடி கொள்ளைக் கும்பல், குடும்பத்தினரைக் கட்டிப் போட்டு லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமன்லால் திவாகர் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல், அங்கிருந்தவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் படுக்கை விரிப்புகளால் கை, கால்களைக் கட்டிப் போட்டு வாயில் டேப் ஒட்டியது. பின்னர், குடும்பத்தினரை மிரட்டி பீரோக்களைத் திறக்கச் செய்து, அதிலிருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே இருந்து அள்ளிக் கொண்டு தப்பியோடியுள்ளது.

இந்தத் துணிகரக் கொள்ளையின் போது, பெண்கள் அறைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பயந்து நடுங்கிய பெண்களைப் பார்த்து, “பயப்பட வேண்டாம், எங்களுக்கும் வீடுகளில் சகோதரிகள் இருக்கிறார்கள், அமைதியாக இருங்கள்” என்று ஆறுதல் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பிறகு ஒருவழியாகத் தங்களை விடுவித்துக்கொண்ட குடும்பத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். லக்னோவின் மிக முக்கியமான குடியிருப்புப் பகுதியில் (Posh area) நடந்த இந்தப் பகீர் கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளைக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in