CRIME
“கிராம தலைவரை கடத்திட்டாங்க..” ட்ரோன்கள், மோப்ப நாய்களுடன் தேடிய போலீஸுக்குக் காத்திருந்த செம ட்விஸ்ட்.. அம்பலமான திடுக்கிடும் உண்மை.!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து கடத்தப்பட்டதாகக் சந்தேகிக்கப்பட்ட கிராமத் தலைவர், பிருந்தாவனில் உள்ள பிரபல துறவி சாந்த் பிரேமானந்த் ஜி மகாராஜ் ஆசிரமத்திற்கு அருகே காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாகக் காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படை மோப்ப நாய் படை, நீர்நிலைகளில் தேடுதல்கள் மற்றும் அதிநவீன ட்ரோன்கேமராக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பல நாட்களாகத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும், காவல்துறையினரின் விரிவான விசாரணையில் இந்த வழக்கில் எவ்விதக் கடத்தலும் நடக்கவில்லை என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது. குடும்பத் தகராறு மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, அந்த கிராமத் தலைவர் யாருக்கும் சொல்லாமல் தனது வீட்டை விட்டு அவராகவே வெளியேறி ஆசிரமப் பகுதிக்கு வந்தது தெரியவந்துள்ளது. அவர் பத்திரமாக மீட்கப்பட்டு, தற்போது அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பிரயாக்ராஜ் மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
