LATEST NEWS
“மொட்டைத் தலையுடன் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த பெண்கள்..!” அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை… பின்னணியில் இருந்த பகீர் மோசடி..!!
அரசாங்கத்திடமிருந்து வெறும் ரூ.15,000 பணம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி, முழு விபரங்களையும் தீர விசாரிக்காமல் சில பெண்கள் தங்களது மொட்டையடித்துக் கொண்ட வினோதமான ஏமாற்றுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் புதிய கைபேசி எண் மூலம் பல பெண்களுக்குத் தொடர்பு கொண்டு, தன்னை ‘சதீஷ் குமார்’ என அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், அரசாங்கத்தின் புதிய திட்டம் ஒன்றின் கீழ் எந்தவொரு பெண் தனது தலையை மொட்டையடித்துக் கொள்கிறாரோ, அவருக்குத் தலா ரூ.15,000 வழங்கப்படும் என்று ஆசை காட்டியுள்ளார். வறுமை மற்றும் பணத்தாசையின் காரணமாக, அந்தத் திட்டம் உண்மையா இல்லையா என்று கூடச் சரிபார்க்காமல் பல பெண்கள் தங்களது தலைமுடியை முழுமையாக மொட்டையடித்துக் கொண்டனர்.
இந்தத் தகவல் காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, மேலும் பல பெண்கள் இந்த மோசடி வலையில் விழுந்து மொட்டையடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்டபடி தங்களது வங்கிக் கணக்கிற்குப் பணம் வராததால் ஏமாற்றமடைந்த பெண்கள், நேராகக் காவல் நிலையத்திற்குத் திரண்டு சென்று தங்களது ரூ.15,000 பணத்தைத் தருமாறு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த பெண்களின் மொட்டைத் தலைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இது போன்ற எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும், யாரோ ஒரு மர்ம நபர் தொலைபேசி வாயிலாகப் பெண்களைத் தவறாக வழிநடத்தி ஏமாற்றியுள்ளார் என்றும் எடுத்துக்கூறி சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாகப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், பெண்களை ஏமாற்றிய அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
