CRIME
அய்யோ குழந்தையை காணோம்..! கதறி துடித்த குடும்பத்தினர்.. 2 நாட்களாக நட்பாகப் பழகி நாடகம்.. கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்..! மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா, பங் கெல் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இருந்து 3 நாட்களே ஆன கைக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலையில் நடந்த இந்த சம்பவத்தில், அடையாளம் தெரியாத ஒரு பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, வெளியில் காத்திருந்த ஒரு நபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் ஒரு இளைஞருடன் பைக்கில் தப்பிச் செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
பங் கெலைச் சேர்ந்த சப்னா என்ற பெண் தனது கணவர் கௌதமிடம் மருத்துவ ஆலோசனை பெறச் சென்றிருந்தார். அப்போது 3 நாள் குழந்தையை கௌதமின் மாமியார் ரக்ஷா தேவியிடம் விட்டுச் சென்றுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ரக்ஷா தேவி தனது பொருட்களை எடுத்து வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த மர்மப் பெண் குழந்தையை நைசாகத் தூக்கிக் கொண்டு தப்பியுள்ளார். குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை அதிகாரிகளும் சுகாதாரப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தேடத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்குரிய அந்தப் பெண் கடந்த இரண்டு நாட்களாகக் குழந்தையின் குடும்பத்தினரைச் சுற்றி சுற்றி வந்து, அவர்களிடம் பேசி நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளான். பின்னர் சரியான சந்தர்ப்பம் பார்த்து குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளதாக முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் மதன் மோகன் மணி திரிபாதி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணையும் பைக் ஓட்டி வந்த நபரையும தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
