CRIME
அய்யோ.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா..? 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… கொதித்தெழுந்த கிராமம்.. விரைவு நீதிமன்ற விசாரணை கேட்டு திரண்ட மக்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் மாவட்டம், கரோத் தாலுகாவில் உள்ள லுக்கா கிராமத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான செய்தி வெளியானதை அடுத்து, உள்ளூர் மக்கள் கடுமையான சோகத்திலும் ஆத்திரத்திலும் மூழ்கியுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் எவ்வித பக்கச்சார்பும் இன்றி விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பொதுமக்கள், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், குற்றவாளிக்கு சட்டத்தில் உள்ள மிகக் கடுமையான தண்டனையை உடனடியாக உறுதியளிக்க வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.
