‘அய்யய்யோ.. அதிவேகமாக வந்த டெம்போ… தூக்கி வீசப்பட்ட பெண்கள்.. நடைபாதையில் நடந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் விபரீத வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

‘அய்யய்யோ.. அதிவேகமாக வந்த டெம்போ… தூக்கி வீசப்பட்ட பெண்கள்.. நடைபாதையில் நடந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் விபரீத வீடியோ..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர்-சாங்லி சாலையில் உள்ள ஹத்கணங்கலே அருகே, அதிவேகமாக வந்த டெம்போ வாகனம் மோதியதில் இரு பெண்கள் படுகாயமடைந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து நேர்ந்துள்ளது. மூன்று பெண்கள் சாலையின் இடதுபுறமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பின்னால் வந்த ஒரு டெம்போ வாகனம் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது திடீரெனத் திரும்பியுள்ளது. அந்த வாகனம் பாதசாரிகள் மீது மிகக் கொடூரமாக மோதி, இரண்டு பெண்களின் மீது ஏறிச் சென்றுள்ளது.

இந்த அதிவேக மோதலின் தாக்கத்தால், அந்தப் பெண்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களுடன் நடந்து சென்ற மூன்றாவது பெண் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இக்கோர விபத்தின் முழுமையான காட்சிகள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி, தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த பெண்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in