நள்ளிரவில் பயங்கரம்.. தோசைக் கடைக்குள் புகுந்து சூறையாடிய 2 இளம் பெண்கள்.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வைரலாகும் பகீர் CCTV வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் பயங்கரம்.. தோசைக் கடைக்குள் புகுந்து சூறையாடிய 2 இளம் பெண்கள்.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வைரலாகும் பகீர் CCTV வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் பெலுபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துளசிபூர் பகுதியில், இரண்டு இளம் பெண்கள் தோசைக் கடைக்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடி ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடை உரிமையாளர் பால் முகுந்த் பாண்டே அளித்துள்ள காவல்துறைப் புகாரின்படி, நவம்பர் 14-ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் கருப்பு நிற ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த இரண்டு இளம் பெண்கள், முதலில் கடையை வீடியோ எடுத்துவிட்டுப் பின்னர் திடீரென உள்ளே புகுந்து தோசைக்கல்லைத் தூக்கி எறிந்ததோடு அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தன்னையும், கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டிப் பொருட்களை வீசித் தாக்கியதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும், மேலும் அவர்கள் பணப்பெட்டியில் இருந்து பணத்தை எடுக்க முயன்றதாகவும் கடை உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, தங்களது தந்தையை ஒரு கும்பல் தாக்கியதாகவும், அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காகவே தாங்கள் கடைக்குச் சென்றதாகவும் அந்த இளம் பெண்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடையிலிருந்த பெண்கள் அலறியடித்து ஓடியதும், வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வைரல் வீடியோ மற்றும் கடை உரிமையாளரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள வாரணாசி காவல்துறையினர், சம்பவத்தின் உண்மையான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in