CRIME
“வராதே” என மெசேஜ் அனுப்பிய பெண் தோழி.. ஆனாலும் அங்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி… அழிக்கப்பட்ட சாட்கள் கிளப்பும் பகீர் மர்மம்.. தொழிலதிபர் மகன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்!..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது பெண் தோழியைச் சந்திக்கச் சென்ற 22 வயது இளைஞர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் மர்மத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காகித வியாபாரி மற்றும் நாளிதழ் உரிமையாளரான விஷால் கந்தேல்வாலின் மகன் சம்பவ் கந்தேல்வால், நவம்பர் 14-ஆம் தேதி ‘ருத்ரா கிரீன்ஸ்’ அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள தனது பெண் தோழியின் வீட்டிற்குச் சென்றபோது, பி-2 கட்டடத்தின் 6-வது மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தீபாவளி விளக்கிலிருந்து சிந்திய எண்ணெயில் கால் வழுக்கி அவர் விழுந்ததாகப் பெண்ணின் மாமா தரப்பில் கூறப்பட்டாலும், சம்பவின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் அவரது செல்போனில் பெண் தோழியுடனான உரையாடல்கள் அழிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரைத் தாக்கி மாடியிலிருந்து தள்ளிக் கொலை செய்திருக்கலாம் என இளைஞரின் குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்; மேலும், சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் அந்தப் பெண் “வராதே” எனக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திடுக்கிடும் புகார்களைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த வீட்டிலிருந்த பெண் தோழி, அவரது தாய், தம்பி மற்றும் மாமா ஆகிய நான்கு பேரையும் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார், 6-வது மாடி பால்கனி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து முக்கியத் தடயங்களைச் சேகரித்துள்ளனர். இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது எண்ணெயில் வழுக்கி விழுந்த விபத்தா அல்லது திட்டமிட்டுத் தள்ளிவிடப்பட்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது; பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் முடிவுகள் வெளிவந்த பிறகே இளைஞரின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
