“பகீர்.. படுக்கையறையில் மாமனாருடன் மயங்கிக் கிடந்த புதுப்பெண்..” மருத்துவமனையில் நேர்ந்த கொடூரம்.. பின்னணியில் இருக்கும் அதிரவைக்கும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“பகீர்.. படுக்கையறையில் மாமனாருடன் மயங்கிக் கிடந்த புதுப்பெண்..” மருத்துவமனையில் நேர்ந்த கொடூரம்.. பின்னணியில் இருக்கும் அதிரவைக்கும் உண்மை..!!

Published

on

திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம்பெண் ஒருவர், தனது மாமனாருடன் வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஃபர்ஹான் என்பவருடன் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக ஃபர்ஹான் வேலைக்காகச் சவூதி அரேபியா சென்றுவிட்டார். ஃபர்ஹானின் தாய் ஏற்கனவே இறந்துவிட்டதால், வீட்டில் அவனது தந்தையும் மனைவியும் மட்டும் தங்கியிருந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு தந்தை வீட்டிற்குத் தாமதமாக வந்துள்ளார். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குள் இருந்து எந்தப் பதிலும் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது, மாமனாரும் மருமகளும் படுக்கையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளம்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்; அதே வேளையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாமனாரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் வியாக்ரா மாத்திரைகளின் புழக்கம் இருந்ததாகச் சில ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறினாலும், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, இந்த மர்ம மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in