“அறிவாலயத்தை வெள்ளையடிச்சு வாடகைக்கு விடப் போறாங்க..!” திமுக-வை ஓப்பனாக வறுத்தெடுத்த தவெக அமைச்சர் நிர்மல் குமார்.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அறிவாலயத்தை வெள்ளையடிச்சு வாடகைக்கு விடப் போறாங்க..!” திமுக-வை ஓப்பனாக வறுத்தெடுத்த தவெக அமைச்சர் நிர்மல் குமார்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தீய சக்தியான திமுகவை முதலமைச்சர் விஜய் முற்றிலுமாக ஒழித்துக் கட்டிவிட்டார்” என்று கூறினார். மக்கள் தங்களின் வாக்குகளின் மூலம் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி, தவெக-வின் நல்ல மாற்றத்திற்கான அரசைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டே விலகிவிடும் நிலை ஏற்படும் என்றும், அதன் காரணமாக அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் சாடினார். இதுமட்டுமின்றி, திமுக தரப்பில் தற்போது அதிகாரப் போட்டிகள் இல்லை என்றும், மாறாக முரசொலி அறக்கட்டளையைக் கைப்பற்றுவதற்காக மட்டுமே அந்த குடும்பத்திற்குள் பெரிய போட்டி நடந்து கொண்டிருப்பதாகவும் நிர்மல் குமார் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in