3 மாத காவல்… கொதிக்கும் இரும்பு கம்பிகளால் உடலை சுட்டு சித்ரவதை… பாகிஸ்தானில் பெண் ஆர்வலர் கொடூரக் கொலை.. உலகையை உலுக்கும் அந்த ஒரு வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

3 மாத காவல்… கொதிக்கும் இரும்பு கம்பிகளால் உடலை சுட்டு சித்ரவதை… பாகிஸ்தானில் பெண் ஆர்வலர் கொடூரக் கொலை.. உலகையை உலுக்கும் அந்த ஒரு வீடியோ..!!

Published

on

பாகிஸ்தான் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டிருந்த 32 வயதான பலூசிஸ்தான் பெண் ஆர்வலர், கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று மாதங்களாகக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண், கடுமையான உடல் ரீதியான பாதிப்புகள் காரணமாக உயிரிழந்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவரது மரணத்தைத் தொடர்ந்து குடும்பத்தினர் அளித்துள்ள தகவலில், காவல்துறையினர் அந்தப் பெண்ணை அணுவணுவாகச் சித்திரவதை செய்து கொன்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். அவரது உடலில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பலூசிஸ்தான் பகுதியில் மனித உரிமைகளுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் ஆர்வலர்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த வரிசையில் தற்போதைய பெண் ஆர்வலரின் மரணம், அப்பகுதியில் நிலவும் மனித உரிமை நிலவரங்கள் குறித்த கவலைகளை மீண்டும் உலக அரங்கில் எழுப்பியுள்ளது. [1]

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in