“சடலமே இல்லை… ஆனால் கணவன் தான் கொலையாளி..?” அமெரிக்காவை உலுக்கும் இந்திய வம்சாவளி செவிலியரின் மரண மர்மம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“சடலமே இல்லை… ஆனால் கணவன் தான் கொலையாளி..?” அமெரிக்காவை உலுக்கும் இந்திய வம்சாவளி செவிலியரின் மரண மர்மம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் வசித்து வந்த 28 வயதான குழந்தை நல செவிலியரும், ஒரு குழந்தைக்குத் தாயுமான மம்தா காஃப்லே பட்கடந்த 2024-ஆம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போனார். வர்ஜீனியாவின் மனசாஸ் பார்க் பகுதியில் வசித்து வந்த மம்தா, பணிக்கு வராததால் கவலையடைந்த சக ஊழியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ஆகஸ்ட் 2, 2024 அன்று போலீஸார் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியபோது, மம்தாவின் கணவரான நரேஷ் பட், தனது மனைவி நியூயார்க் அல்லது டெக்சாஸ் செல்ல திட்டமிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறினார். மேலும், மம்தா தனது செல்போனை உடைத்துவிட்டுச் சென்றதாகவும், தங்களுக்குள் விவாகரத்து ஆகவிருந்ததாகவும் கூறி, ஆரம்பத்தில் தனது மனைவி காணாமல் போனதாகப் புகார் அளிக்க அவர் மறுத்துவிட்டார். பின்னர் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 5 அன்று அவரே புகார் அளித்தார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, அதே மாதத்தின் பிற்பகுதியில் நரேஷ் பட் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சடலத்தை மறைத்தல் மற்றும் சடலத்தை அவமதித்தல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மம்தா தம்பதியரின் வீட்டிற்குள்ளேயே வைத்து படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் மறைக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மம்தாவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இரத்தக் கறைகள் அவருடையதுதான் என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொலையாளி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையில் பிடிக்கும் மின்சார ரம்பம் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுத் தரப்பு தயாராகி வருகிறது.

Advertisement

மம்தாவின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படாத நிலையில், நரேஷ் பட் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து, தான் குற்றமற்றவர் என்று வாதிட்டு வருகிறார். சடலம் கிடைக்காத நிலையிலும் கொலைக் குற்றத்திற்காக விசாரணை நடத்தப்படும் வர்ஜீனியாவின் மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக இது பார்க்கப்படும் நிலையில், அக்டோபர் 5, 2026 அன்று இந்த வழக்கிற்கான ஜூரி எனப்படும் நடுவர் குழுத் தேர்வு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மம்தா காணாமல் போய் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், அவரது குடும்பத்தினர் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in