“கட்சி மீட்டிங்ன்னு சொல்லி உல்லாசமா இருக்கான்” மனைவிக்கு காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்.. ஹோட்டல் அறையில் அரைகுறை ஆடையில் சிக்கிய அரசியல்வாதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கட்சி மீட்டிங்ன்னு சொல்லி உல்லாசமா இருக்கான்” மனைவிக்கு காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்.. ஹோட்டல் அறையில் அரைகுறை ஆடையில் சிக்கிய அரசியல்வாதி..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தின் ஜாவ்ரா பகுதியில், கேசரியா சக்தி சங்கதன் என்ற அமைப்பின் உள்ளூர் இந்துத்துவ தலைவரான விஜய் தக்த் ஆச்சார்யா, காலையில் வீட்டிலிருந்து புறப்படும்போது ஒரு முக்கியக் கூட்டத்திற்குச் செல்வதாகத் தன் மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி, கணவனின் மொபைல் எண்ணை ஜிபிஎஸ் மூலம் பின்தொடர்ந்து கண்காணித்தார். அப்போது, அவர் கட்சி அலுவலகத்திற்குச் செல்லாமல், அங்குள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அந்தப் பெண் அவசரக் காவல் எண்ணான 112-க்குத் தகவல் கொடுத்து, போலீசாரை நேரில் வரவழைத்து அந்த ஹோட்டல் அறைக்குச் சென்றார். அங்கு கதவைத் திறந்து பார்த்தபோது, தன் கணவர் மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, போலீசார் முன்னிலையிலேயே கணவருக்குக் கன்னத்தில் அறை கொடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், மனைவியின் புகாரின் பேரில் போலீசார் அந்த அரசியல்வாதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in