கண்ணே கலங்குது..! “ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி” பிறந்தநாள் கொண்டாடிவிட்டு சந்தோஷமாக ஊருக்கு திரும்பியபோது நேர்ந்த பயங்கரம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணே கலங்குது..! “ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி” பிறந்தநாள் கொண்டாடிவிட்டு சந்தோஷமாக ஊருக்கு திரும்பியபோது நேர்ந்த பயங்கரம்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கோரச் சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முசாபர்நகரின் ஹரி பிருந்தாவன் காலனியைச் சேர்ந்த ஆதேஷ் கோயல் என்பவர், தனது குடும்பத்தினருடன் லக்ஸார் பகுதியில் உள்ள உறவினரின் 75-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு, ஸ்கார்பியோ காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது புர்காஜி காவல் எல்லைக்குட்பட்ட லக்ஸார் சாலையில் எதிர் திசையில் வந்த டம்பர் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நேரிட்டது.

இந்த பயங்கர மோதலில் கார் பலத்த சேதமடைந்ததில், காரில் பயணித்த ஆதேஷ் கோயல் (50), நிஷா (35), கோனி (11) மற்றும் ராக்கி (48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் உள்ளூர் மக்களும், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

காயமடைந்த ஆதேஷின் மனைவி ரூபி கோயல் மற்றும் குசும் கோயல் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக மீரட்டில் உள்ள உயர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்துக்குக் காரணமான டம்பர் லாரியைக் பறிமுதல் செய்த காவல்துறையினர், அதன் ஓட்டுநரைக் கைது செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினரின் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிய குடும்பத்தில் இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in