“அத்தைக்கு மீசை முளைக்கட்டும்” திமுக – அதிமுக கூட்டணி வியூகத்திற்கு.. ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த அமைச்சர் விஸ்வநாதன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அத்தைக்கு மீசை முளைக்கட்டும்” திமுக – அதிமுக கூட்டணி வியூகத்திற்கு.. ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த அமைச்சர் விஸ்வநாதன்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கேள்விக்கு, ‘அத்தைக்கு மீசை முளைக்கட்டும்’ என அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியை அகற்றிவிட்டு திமுக மீண்டும் ஆட்சியமைக்க நினைப்பது வெறும் பகல் கனவு என்றும், அது எப்போதும் கனவாகவே இருக்கும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார். மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சியே தொடர்வது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

தவெக அரசுக்கு எதிராக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயல்வதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளின் வியூகங்களை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் விஸ்வநாதன் அளித்துள்ள இந்தப் பதில் தமிழக அரசியலில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in