LATEST NEWS
டாஸ்மாக் கடையில் நடக்கும் மெகா ஊழல்..? 24 மணி நேரத்தில் நடந்த திடீர் மாற்றம்… பின்னணியில் என்ன நடக்குது..? ஆர்.எஸ். பாரதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!!
டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 மதுபான பிராண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை 24 மணி நேரத்திற்குள்ளேயே அரசு நீக்கியிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தத் திடீர் தடை நீக்கத்தின் பின்னணியில் ஏதோ மிகப்பெரிய ஊழல் நடப்பதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
தடை நீக்கப்பட்ட அந்த மதுபான நிறுவனத்திற்கும் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கிற்கும் தொடர்பிருப்பதாக ஆர்.எஸ். பாரதி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்குச் செல்லக் காரணமாக இருந்த அதே நிறுவனம் தான் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (ஃபைல்ஸ்) தான் தற்போது தயார் செய்து வருவதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். உரிய ஆதாரங்களுடன் இந்த முறைகேட்டை வெளிக்கொண்டு வரப்போவதாக அவர் எச்சரித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
