அடிப்பாவி..! அம்மிக்கல்லை எடுத்து தலையில் ஒரே போடு… துடிதுடித்து பலியான கணவன்… மனைவியின் வெறிச்செயலால் நடந்த பயங்கரம்…!! – cinefeeds
Connect with us

CRIME

அடிப்பாவி..! அம்மிக்கல்லை எடுத்து தலையில் ஒரே போடு… துடிதுடித்து பலியான கணவன்… மனைவியின் வெறிச்செயலால் நடந்த பயங்கரம்…!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் காந்தி நகர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியே கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் என்ற நபருக்கும் அவரது மனைவி சூரஜ் பாய் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், திடீரென தீவிரமடைந்து இந்த துயரச் சம்பவத்தில் முடிந்துள்ளது.

இருவருக்கும் இடையே தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த சூரஜ் பாய் வீட்டிலிருந்த அம்மிக்கல்லை டுத்து கணவர் சந்தோஷின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பெருமளவில் பதற்றமும் குழப்பமும் நிலவியது.

Advertisement

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காந்தி நகர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, சந்தோஷின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். இதில், தம்பதியிடையே நீடித்து வந்த குடும்பத் தகராறே இக்கொலைக்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்தது.

இக்கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மனைவி சூரஜ் பாயைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அம்மிக்கல்லைக் கைப்பற்றியுள்ள போலீசார், இச்சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in