“என்னை காப்பாத்துங்க அம்மா..” ஓராண்டு கழித்து போனில் வந்த கதறல் சத்தம்..! 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை காப்பாத்துங்க அம்மா..” ஓராண்டு கழித்து போனில் வந்த கதறல் சத்தம்..! 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளியின் 17 வயது மகள், கடந்த 2025 ஆகஸ்ட் 14 அன்று பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று மாயமானார். இதுகுறித்து சரபா நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகாரளித்த போதிலும், ஓராண்டாகச் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த ஜூலை 2026-இல் தாயின் தொலைபேசியைத் தொடர்புகொண்ட சிறுமி, தான் மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே ஹண்டேவாடி பகுதியில் முகமது ரயீஸ் ரஃபீக் ஷேக் (22) என்பவருடன் இருப்பதாகக் கூறித் தனது இருப்பிடத்தைப் பகிர்ந்து, மீட்டெடுக்குமாறு கதறியுள்ளார். இதையறிந்த பெற்றோர் புனே ஃபூர்சுங்கி போலிஸாரின் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.

Advertisement

படிப்பிற்கு உதவுவதாகக் கூறி தன்னை லூதியானாவிலிருந்து அலிகார், கர்நாடகா மற்றும் புனேவிற்கு அழைத்துச் சென்று, தனது விருப்பத்திற்கு மாறாக உடலுறவு கொண்டதாகவும், திருமணம் செய்ய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாகவும் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது ரயீஸ் ரஃபீக் ஷேக் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in