CRIME
“போலீஸ் சித்திரவதையே காரணம்” – ஒன்றரை மாதமாக சிறுமி மாயமான வழக்கில் சிக்கிய 20 வயது வாலிபர் தற்கொலை… உறவினர்கள் கொந்தளிப்பு..!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், சிறுமி மாயமான வழக்கில் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சுர்ஜித் (20) என்ற வாலிபர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் ஒரு சிறுமி மாயமாகியிருந்த நிலையில், அவரோடு கடைசியாகப் பேசிய நபர்களில் சுர்ஜித்தும் ஒருவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் கடுமையான மன உளைச்சல் மற்றும் சிறுமியின் தந்தையின் தொடர் மிரட்டல்களே தனது மகனின் தற்கொலைக்குக் காரணம் என சுர்ஜித்தின் தந்தை கங்காராம் குற்றம் சாட்டியுள்ளார். போலீசார் சுர்ஜித்தை மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக அவனது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையே, தற்கொலைக்குக் தூண்டியதாகச் சிறுமியின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூன்று நாட்கள் காவலில் வைத்து வாலிபரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை காவல்துறை உயர் அதிகாரி மறுத்துள்ளார். தற்பொழுது வாலிபரின் தற்கொலை மற்றும் சிறுமி மாயமான வழக்கு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
