வறுமையின் உச்சம்..! இ-ரிக்‌ஷா வாங்குவதற்காக 8 மாத ஆன் குழந்தையை ₹1.80 லட்சத்திற்கு விற்ற தந்தை.. கடைசியில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வறுமையின் உச்சம்..! இ-ரிக்‌ஷா வாங்குவதற்காக 8 மாத ஆன் குழந்தையை ₹1.80 லட்சத்திற்கு விற்ற தந்தை.. கடைசியில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், சொந்தமாக இ-ரிக்‌ஷா வாங்குவதற்காக 8 மாதமே ஆன தனது பெற்ற மகனை 1.80 லட்ச ரூபாய்க்குத் தந்தை விற்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஆராம் சிங் என்ற அந்த நபர், வாடகைக்கு இ-ரிக்‌ஷா ஓட்டி வந்துள்ளார். சொந்தமாக இ-ரிக்‌ஷா வாங்கிப் பிழைக்கப் பணம் தேவைப்பட்டதால், தரகர்களின் ஆலோசனையின் பேரில் இந்த விபரீத செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே ஆறு பெண் குழந்தைகள் இருந்து, ஆண் குழந்தை வேண்டும் என்ற சமூக மற்றும் குடும்ப அழுத்தத்தில் இருந்த தேவராஜ் – சுனிதா தம்பதியினரிடம் இந்தச் சிறுவன் விற்கப்பட்டுள்ளான். கடந்த அக்டோபர் 3, 2025 அன்று தரகர்கள் முன்னிலையில் பணம் கைமாறி குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு தனது தவறை உணர்ந்த தந்தை, குழந்தை காணாமல் போய்விட்டதாகக் காவல் நிலையத்தில் நாடகமாடி பொய் புகார் அளித்துள்ளார்.

Advertisement

இப்புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, தந்தை குழந்தையை விற்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார், குழந்தையை வாங்கிய தம்பதியிடமிருந்து 8 மாத குழந்தையைப் பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். மேலும், மனித கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை விற்ற தந்தை, வாங்கிய தம்பதி மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in