LATEST NEWS
விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 லட்சம் வரை கடன் – தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு..!!
தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு, சிறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், புதிய ஊரகத் தொழில் கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தில், மொத்தம் ₹5,000 கோடி கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை மத்திய காலக்கடன் 36 மாதங்களுக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்படும். மேலும், தேவைக்கேற்ப 3 முதல் 6 மாதங்கள் வரை தவணைச் சலுகைக் காலம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ₹2,000 கோடியும், கடன் சங்கங்கள் மூலம் ₹3,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
