மனைவிக்கு வந்த “GOOD BYE மெசேஜ்”… பதறியடித்து ஓடிப்போன குடும்பத்தினர்… அடுத்த நொடியே கணவர் எடுத்த முடிவால் பயங்கரம்…!! – cinefeeds
Connect with us

CRIME

மனைவிக்கு வந்த “GOOD BYE மெசேஜ்”… பதறியடித்து ஓடிப்போன குடும்பத்தினர்… அடுத்த நொடியே கணவர் எடுத்த முடிவால் பயங்கரம்…!!

Published

on

மெதக் மாவட்டம் கௌடிபள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட திம்மாப்பூர் வனப்பகுதியில், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத மன உளைச்சலால் நரசிம்ஹுலு கவுட் (45) என்ற நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தனது மகள்களின் திருமணத்திற்காகவும், புதிய வீடு கட்டுவதற்காகவும் நரசிம்ஹுலு அதிக அளவில் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

நாட்கள் செல்லச் செல்ல வாங்கிய கடனுக்கான வட்டிப் பணம் கிடுகிடுவென உயர்ந்ததால், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தனது சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு நரசிம்ஹுலு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஊருக்குச் செல்லாமல் திம்மாப்பூர் வனப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்து தனது மகளுக்குத் தான் இருக்கும் இடத்தை பகிர்ந்துள்ளார். மேலும், தனது மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் ‘குட்பை அம்மா’ என்ற குறுஞ்செய்தியையும் அனுப்பியுள்ளார்.

Advertisement

இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியைக் கண்டு பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவருக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்து, அவர் பகிர்ந்த இருப்பிடத்தை வைத்து வனப்பகுதியில் தீவிரமாகத் தேடினர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் நரசிம்ஹுலு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in