“ஆன்லைன் ஆப்ஸ் மூலம் கோடிகள் சம்பாதிப்பது எப்படி..?” இளைஞர்களை ஏமாற்றி 20 கோடி சொத்து.. ED-யிடம் சிக்கிய 26 வயது வாலிபரின் ரகசிய உத்திகள்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஆன்லைன் ஆப்ஸ் மூலம் கோடிகள் சம்பாதிப்பது எப்படி..?” இளைஞர்களை ஏமாற்றி 20 கோடி சொத்து.. ED-யிடம் சிக்கிய 26 வயது வாலிபரின் ரகசிய உத்திகள்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதேயான அனுராக் திவேதி, இளைஞர்களுக்கு ஆன்லைன் ஆப்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையைக் காட்டி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியுள்ளார். ஃபேன்டஸி கிரிக்கெட் அணிகள் மூலம் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற கனவை இளைஞர்களிடம் விதைத்து, ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதன் மூலம் இவர் பெரும் செல்வத்தையும், சொகுசு கார்களையும் குவித்து வந்தார். இவரது இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் ரொக்கம், சொகுசு கார்கள் மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. இவருக்குச் சொந்தமான மொத்த சொத்து மதிப்பு 20 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று ஊடகங்கள் மதிப்பிட்டுள்ள நிலையில், இவரது சொத்து குவிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீவிர விசாரணைக்கு இடையே, அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அனுராக் திவேதி, தற்போது துபாயில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அண்மையில் கர்வா சௌத் பண்டிகையையொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா பின்னணியில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்களின் பணத்தில் தனது கோடீஸ்வர கனவை நிஜமாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் எப்போது பதிலளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இந்தியா திரும்பி சட்டபூர்வ விசாரணைக்கு ஒத்துழைப்பாரா அல்லது துபாயிலேயே தங்கிவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in