CRIME
“உன் பொண்ணு தூக்குப்போட்டு செத்துட்டா” பெத்த மகளையே கழுத்தை நெரித்துக் கொன்று தற்கொலை நாடகமாடிய தாய்… நெஞ்சை உலுக்கும் பகீர் பயங்கரம்..!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில், மொபைல் போனை அதிகளவில் பயன்படுத்தியதற்காக 14 வயது மகளைப் பெற்ற தாயே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை கண்டித்தும் மகள் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாததால், ஆத்திரமடைந்த தாய் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடி மகள் மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு தாய் விஜயலட்சுமி கடுமையான கோபமடைந்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர் தனது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இக்கொலையை மறைப்பதற்காகத் தனது கணவருக்கு போன் செய்து, மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.
இதனை நம்பி பதறியடித்து வந்த தந்தை, சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்கு என நினைக்கப்பட்டாலும், உள்ளூர் மக்களின் தகவல்கள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாகப் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தாய் விஜயலட்சுமி தனது மகளைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
