CRIME
என்னால மறக்க முடியல… “இந்த கிழவன் என்னை சின்னவயசுல” உறங்கிக்கொண்டிருந்த தாத்தாவை கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொன்ற பேத்தி… பகீர் கிளப்பும் சம்பவம்…!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், கல்லூரி மாணவி ஒருவர் தனது தாத்தாவைக் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு தாமதமாக வீட்டிற்கு வந்ததால் பெற்றோர் கண்டித்த நிலையில், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி, கோபித்துக் கொண்டு தனியாகச் சென்றுள்ளார்.
அதன்பின், வீட்டிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது தாத்தாவின் வீட்டிற்குச் சென்ற மாணவி, அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற காவல் படை வீரரான 75 வயது தாத்தாவை கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் கல்லூரி மாணவியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறு வயதில் தனது தாத்தா தன்னிடம் பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அந்த கசப்பான நினைவுகளும் ஆத்திரமும் மனதில் நீடித்து வந்ததால் அவரைத் தாக்கி கொலை செய்ததாகவும் அம்மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
