CRIME
“இவ்வளவு சொத்து எப்படி வந்தது..?” ஸ்பாவில் சொக்க வைக்கும் மசாஜ்… பிசியோதெரபிஸ்ட் வேடத்தில் உலா வந்த இன்ஸ்டா அழகி.. பரபரப்பு பின்னணி..!!
சமூக வலைத்தளங்களில் படுக்கை மெத்தை நிறையப் பணத்தை விரித்து வைத்தும், கிலோ கணக்கில் நகைகளை அணிந்தும் வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமான இன்ஸ்டா பிரபலம் கன்னியாகுமரி மதுமிதாவின் வீட்டில் கடந்த மாதம் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவர் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் வசித்து வரும் நிலையில், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நேரம் பார்த்து இந்தத் திருட்டு நடந்துள்ளது. வழக்கை விசாரித்த போலீஸார், மதுமிதாவின் ஆடம்பர இன்ஸ்டாகிராம் வீடியோக்களைப் பார்த்து நோட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கி பாண்டி உட்பட மூன்று பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 98 சவரன் நகைகளை மீட்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு மதுமிதாவுக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தன என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அவர் மீதுள்ள பல்வேறு மோசடி மற்றும் பாலியல் வழக்குகள் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு நெல்லையில் உள்ள ஸ்பா ஒன்றில் வேலை செய்தபோது, கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டி 5 சவரன் நகையைத் திருடியதாக இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், போலியாக பிசியோதெரபிஸ்ட் என்று கூறிக்கொண்டது, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வடசேரி பகுதியில் சட்டவிரோதமாக ஸ்பா நடத்தி பாலியல் வழக்கில் கைதானது போன்ற குற்றச்சாட்டுகள் அம்பலமாகியுள்ள நிலையில், தற்போது இவர் மீது வருமான வரித்துறை விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
