அடக்கொடுமையே.. மனைவி கண் முன்னாடியே நடந்த கொடூரம்.. சமாதானம் பேச வந்த அக்கா கணவரைத் துண்டு துண்டாக வெட்டிய தம்பி.. நடுங்க வைக்கும் பின்னணி..!1 – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே.. மனைவி கண் முன்னாடியே நடந்த கொடூரம்.. சமாதானம் பேச வந்த அக்கா கணவரைத் துண்டு துண்டாக வெட்டிய தம்பி.. நடுங்க வைக்கும் பின்னணி..!1

Published

on

சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்த அருண் பாண்டியன் (30) என்ற பெயிண்டர், பிரிந்து வாழ்ந்த தன் மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைப்பதற்காகச் சென்ற இடத்தில், அவரது மைத்துனரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதிபா என்ற பெண்ணை அருண் பாண்டியன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அருண் பாண்டியன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், தம்பதியரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த பிரதிபா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வழுதலம்பேட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அருண் பாண்டியன் பலமுறை சமாதானம் பேச முயன்றும் பிரதிபா அதனைத் தவிர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அக்டோபர் 4-ஆம் தேதி பிரதிபாவைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அருண் பாண்டியன் மீண்டும் அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பிரதிபாவின் தம்பி பிரவீன் மற்றும் அவரது நண்பர்களான வெங்கடேசன், வேலு ஆகிய 3 பேரும் சேர்ந்து, பிரதிபாவின் கண் முன்னாலேயே அருண் பாண்டியனைச் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அருண் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருமுடிவாக்கம் போலீஸார் அருண் பாண்டியனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இக்கொலை வழக்கு தொடர்பாகப் பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in