CRIME
ஜிம் பார்ட்டியில் கொடூரம்..! நள்ளிரவில் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட ஜிம் ஊழியர்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்..!!
பெங்களூரு சஹாகரா நகரில் உள்ள ஜிம்மில் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வந்த நந்தன் (25) என்பவர், ஜிம்மின் முதலாம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்திற்குப் பிறகு தனது நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளரின் வீட்டிற்கு இரவு விருந்திற்காகச் சென்றுள்ளார். பெங்களூரு கெம்பாபுராவில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை விருந்து நடைபெற்றுள்ளது.
விருந்தின் போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த நால்வர் நந்தனை கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு உண்டானது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாததால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அமிருதஹள்ளி காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட ஜிம் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் உட்பட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிப் பதிவுகளின் உதவியுடன் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
