சாவு எப்படி வருதுன்னு பாருங்க…? பைக்கில் இருந்து விழுந்த அடுத்த நொடி… இளைஞர் மீது ஏறிய மற்றொரு பைக்.. துடிதுடித்து பலியான நபர்… சிசிடிவி காட்சியால் ஷாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாவு எப்படி வருதுன்னு பாருங்க…? பைக்கில் இருந்து விழுந்த அடுத்த நொடி… இளைஞர் மீது ஏறிய மற்றொரு பைக்.. துடிதுடித்து பலியான நபர்… சிசிடிவி காட்சியால் ஷாக்..!!

Published

on

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தின் மாங்ரோல் துறைமுகப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் மாங்ரோல் துறைமுகச் சாலை வழியாகச் சென்றபோது, அவர்களின் வாகனம் திடீரென நிலை தடுமாறி சாலையில் பயங்கரமாகச் சறுக்கி விழுந்தது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு, சாலையின் நடுவே விழுந்தார்.

அவர் விழுந்த அடுத்த சில வினாடிகளில், அவருக்குப் பின்னால் அதே சாலையில் அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், சாலையில் கிடந்த அந்த இளைஞரின் மீது எதிர்பாராதவிதமாக ஏறி இறங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து முழுவதுமே அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in