“அய்யயோ காப்பாத்துங்க” காவலர் மகள் மீதே அசீட் வீச்சு… படித்துவிட்டு வீடு திரும்பும்போது காதலனால் காத்திருந்த பயங்கரம்… முகம், கண் முழுவதும் பாதிப்பு… !! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யயோ காப்பாத்துங்க” காவலர் மகள் மீதே அசீட் வீச்சு… படித்துவிட்டு வீடு திரும்பும்போது காதலனால் காத்திருந்த பயங்கரம்… முகம், கண் முழுவதும் பாதிப்பு… !!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் மாவட்டத்தில், காவலர் ஒருவரின் 22 வயது மகள் மீது அவளின் காதலன் அமில வீச்சு நடத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. எம்.ஏ படிப்பை முடித்துவிட்டு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் அந்த மாணவி, இ-லைப்ரரியில் இருந்து படித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆத்மானந்த் பள்ளி மற்றும் பாசனக் காலனி அருகே வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமிலம் பட்டவுடன் ஏற்பட்ட கடுமையான எரிச்சலால் மாணவி கூச்சலிடவே, அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதலில் மாணவியின் முகம், கண் மற்றும் உடலின் வலது பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், முதலுதவிக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Advertisement

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பகுதியைக் கட்டுக்குள் கொண்டுவந்து, தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தாக்குதலுக்குப் பின் தப்பியோடிய முதன்மை குற்றவாளி கரண் குஞ்சாம் மற்றும் அவருக்கு உதவிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in