“மாதம் ரூ.15,000 ஜூஸ் கடை ஊழியர் டூ ரூ.94,400 கோடி சூதாட்ட மன்னன்..!” துபாயை ஆட்டிய சௌரப் சந்திரகர் சிபிஐ-யிடம் சிக்கியது எப்படி..? பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மாதம் ரூ.15,000 ஜூஸ் கடை ஊழியர் டூ ரூ.94,400 கோடி சூதாட்ட மன்னன்..!” துபாயை ஆட்டிய சௌரப் சந்திரகர் சிபிஐ-யிடம் சிக்கியது எப்படி..? பகீர் பின்னணி..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் பகுதியில் மாதம் ரூ.15,000 சம்பளத்திற்கு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த சௌரப் சந்திரகர், துபாயில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்லைன் சூதாட்ட சாம்ராஜ்யத்தை இயக்கி வந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மகாதேவ் பெட்டிங் ஆப்’ மூலம் சுமார் ரூ.94,400 கோடி வரை சட்டவிரோதப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சௌரப் சந்திரகரின் நெட்வொர்க் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் மூலம் ஓமனில் கைது செய்யப்பட்ட இவரை, சிபிஐ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தற்போது பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்த சௌரப் சந்திரகர், தனது கூட்டாளி ரவி உப்பலுடன் இணைந்து இந்த ஆன்லைன் சூதாட்ட செயலியை உருவாக்கினார். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தச் சூதாட்ட வலைப்பின்னல், பின்னர் இந்தியா மற்றும் துபாய் முழுவதும் கிளை பரப்பியது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையின்படி, மகாதேவ் செயலி மற்றும் அதனுடன் தொடர்புடைய தளங்கள் வழியாக மட்டும் சுமார் ரூ.94,400 கோடி வரை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஹவாலா மற்றும் போலியான பினாமி வங்கிக் கணக்குகள் மூலம் இந்தத் தொகை கோடிக்கணக்கில் கைமாறியுள்ளது.

Advertisement

துபாயில் கொடிகட்டி பறந்த இவரது சாம்ராஜ்யம் மற்றும் அவரது ஆடம்பர வாழ்க்கை முறையை அமலாக்கத்துறை முழுமையாக முடக்கியுள்ளது. துபாயில் நடந்த இவரது பிரம்மாண்ட திருமணத்திற்கு மட்டும் ரூ.200 கோடிக்கும் மேல் செலவழிக்கப்பட்டதும், அதில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. ஓமன் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவரை, இந்தியப் புலனாய்வு அமைப்புகள் தீவிர ராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு டெல்லிக்குக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவில் சௌரப் சந்திரகரிடம் நடத்தப்படும் அடுத்தகட்ட விசாரணையின் மூலம், இந்த சூதாட்ட செயலியில் முதலீடு செய்த முக்கியப் புள்ளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பின்னணி அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in