“ஓ மை காட்.. இது நீதானா..?!” தீபாவளி நாளில் பழைய ஆசிரியருக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த அபிஷேக் சர்மா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஓ மை காட்.. இது நீதானா..?!” தீபாவளி நாளில் பழைய ஆசிரியருக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த அபிஷேக் சர்மா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, தீபாவளி பண்டிகையையொட்டி தனது பழைய பள்ளி ஆசிரியரை எதிர்பாராதவிதமாக நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு தனது மாணவனை திடீரெனப் பார்த்த அந்த ஆசிரியர் அடைந்த வியப்பும் மகிழ்ச்சியும் தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு அந்தப் பகுதி வழியாகச் சென்ற அபிஷேக் சர்மா, தனது ஆசிரியரின் வீட்டின் அருகே நயித்து அவரைச் சந்திக்க முடிவு செய்துள்ளார். காரிலிருந்து இறங்கி வீட்டின் நுழைவு வாயிலை நோக்கி நடந்து சென்ற அவர், ஆரம்பத்தில் முகக்கவசம் அணிந்திருந்தார்; வாயிலை நெருங்கியதும் அதனை அகற்றிவிட்டு ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement

அபிஷேக்கைக் கண்டதும் துளியும் எதிர்பாராத ஆசிரியர் மிகுந்த ஆச்சரியத்துடன் “ஓ மை காட்!” என்று கூறி அவரை அன்போடு கட்டிப்பிடித்துக் கொண்டார். வகுப்பறைகள் மற்றும் பாடப்புத்தகங்களைத் தாண்டி ஆசிரியர்-மாணவர் இடையேயான பந்தம் எப்போதுமே மாறாமல் நிலைத்திருக்கும் என்பதை உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியான தருணம் இணையத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in