CRIME
உச்சகட்ட அவலம்.. அடுத்தடுத்து 17 வயது சிறுமியை சீரழித்த 4 வாலிபர்கள்… இன்ஸ்டா காதலனால் விபரீதம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரது காதலன், உறவினர் மற்றும் நண்பர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அஜன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. சிறுமியுடன் தனிமையில் இருந்த அந்தரங்க காட்சிகளை வீடியோ எடுத்த அஜன், அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த கொடூரத்தைப் பற்றி சிறுமி தனது அண்ணன் உறவுமுறையான விவேக்கிடம் கூறி உதவி கேட்டுள்ளார். ஆனால், அவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை அறிந்த விவேக்கின் நண்பரான தினேஷ், சிறுமியின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக நம்பவைத்து கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வெள்ளிச்சந்தை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுமியை அடைத்து வைத்து, கட்டாயப்படுத்தி மது கொடுத்து தினேஷ் மற்றும் அவரது நண்பர் ஆன்றோ ஜெரிஷ் ஆகிய இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தலைமறைவாக இருந்த அஜன் மற்றும் விவேக்கை அக்டோபர் 1-ஆம் தேதியும், சென்னையில் பதுங்கியிருந்த தினேஷ் மற்றும் ஆன்றோ ஜெரிஷை அக்டோபர் 4-ஆம் தேதி இரவும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
