“எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை..” பிளைதுபாய் விமான சம்பவத்தில் டிரம்ப் வைத்த குற்றச்சாட்டு… உடனடியாக பதறியடித்து ஈரான் சொன்ன விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை..” பிளைதுபாய் விமான சம்பவத்தில் டிரம்ப் வைத்த குற்றச்சாட்டு… உடனடியாக பதறியடித்து ஈரான் சொன்ன விளக்கம்..!!

Published

on

பிளைதுபாய் விமான சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் சந்தேகிக்கின்றன. இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “இந்த சம்பவத்தில் ஈரான் தொடர்பு இருப்பது உறுதியானால் அந்த நாடு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்” என்று எச்சரித்திருந்தார். இந்தநிலையில் பிளைதுபாய் பயணிகள் விமானத்தில் நடந்த பாதுகாப்புச் சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று ஈரான் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயில் கூறியதாவது:- பிளைதுபாய் சம்பவத்துடன் ஈரானை தொடர்புபடுத்தும் செய்திகள் ஆதாரமற்றவை. பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே எங்கள் நாட்டின்மீது குற்றம் சாட்டப்படுகிறது.

Advertisement

காசாவில் நடப்பவையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக இஸ்ரேலும், அதன் நட்பு நாடுகளும் செய்யும் முயற்சி இது. இஸ்ரேல் கையாளும் பழைய தந்திரம் இது. ஈரான் தன்னை தற்காத்துக்கொள்ள முழுமையாக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in