பார்வை இழந்தவர்களுக்கு வரப்பிரசாதம்..! ஒரே ஊசியில் மீண்டும் கண் பார்வை – விஞ்ஞானிகளின் மாபெரும் சாதனை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்வை இழந்தவர்களுக்கு வரப்பிரசாதம்..! ஒரே ஊசியில் மீண்டும் கண் பார்வை – விஞ்ஞானிகளின் மாபெரும் சாதனை..!!

Published

on

ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற மரபணுக் கோளாறால் பார்வை இழந்தவர்களுக்குப் புதிய நம்பிக்கை அளிக்கும் விதமாக ‘மோகென்ரி’ என்ற புதிய மரபணு ஊசியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உலகளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் இந்தப் பார்வைக் குறைபாட்டிற்குத் தீர்வு காணும் வகையில் இந்த நவீன சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நானோஸ்கோப் தெரபியூட்டிக்ஸ் (Nanoscope Therapeutics) நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஊசியை கண்ணின் விழித்திரையில் செலுத்துவதன் மூலம், அங்கு எஞ்சியுள்ள செல்களை ஒளியை உணரும் வகையில் செயல்பட வைக்க முடியும். இதன் மூலம் சேதமடைந்த பார்வைச் செல்களுக்குப் பதிலாக மற்ற செல்கள் தூண்டப்பட்டு, நோயாளிகள் மீண்டும் பார்வையைப் பெற இந்தச் சிகிச்சை உதவுகிறது.

Advertisement

குறிப்பாக, இந்தப் புதிய மரபணு ஊசிக்கான மனிதர்களுக்கான முதல் கட்ட மருத்துவப் பரிசோதனை இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள கண் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோருக்குப் பார்வைத் திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in