கண்ணே கலங்குது..! அம்மா நீதானா அது..? பிறந்தது முதல் பார்க்க முடியாத கண்கள் திறந்தபோது செய்த அந்த ஒரு செயல்.. ஆனந்தத்தில் கதறி துடித்த தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணே கலங்குது..! அம்மா நீதானா அது..? பிறந்தது முதல் பார்க்க முடியாத கண்கள் திறந்தபோது செய்த அந்த ஒரு செயல்.. ஆனந்தத்தில் கதறி துடித்த தாய்..!!

Published

on

பார்வை குறைபாட்டினால் அவதிப்பட்டு வந்த சிறு குழந்தை ஒன்று, அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதன்முறையாகத் தனது கண்களைத் திறந்த நெகிழ்ச்சியான தருணம் பார்ப்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. பிறந்தது முதல் இந்த உலகைக் காண முடியாத அந்தச் சிறுவனுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அறுவை சிகிச்சை முடிந்து, அவனது கண்களில் கட்டப்பட்டிருந்த துணிகள் மெதுவாக அவிழ்க்கப்பட்ட போது அங்கிருந்த அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

அவனது கண்களில் இருந்த கட்டுகள் முழுமையாக நீக்கப்பட்டு, அவன் மெதுவாகக் கண்களைத் திறந்து முதன்முறையாகத் தனது தாயின் முகத்தைப் பார்த்தான். அந்த நொடியில், தான் பார்ப்பது யார் என்று புரிந்து கொண்ட அந்தப் பிஞ்சு குழந்தை, மகிழ்ச்சியில் தனது தாயை பார்த்து சிரித்தது. பல வருடங்களாக இருளில் மூழ்கியிருந்த தன் மகனுக்குப் பார்வை கிடைத்ததைக் கண்ட தாயும், அங்கிருந்த மருத்துவர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்த இந்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in