LATEST NEWS
“அய்யோ நேபாளத்தில் மீண்டும் மகா பேரழிவு..” சில நொடிகளில் ஆற்றில் சரிந்து விழுந்த ராட்சத மலை.. சோசியல் மீடியாவை அதிர வைக்கும் திக் திக் வீடியோ..!!
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் பாதிப்புகள் மாறுவதற்குள், நேபாளத்தில் நேற்று மீண்டும் ஒரு பயங்கர நிலச்சரிவு மற்றும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலையின் ஒரு பெரிய பகுதி அப்படியே சரிந்து சில நொடிகளில் காளி கந்தகி ஆற்றுக்குள் விழும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14 பேர் மாயமாகியுள்ளனர்.
இந்த இயற்கை பேரழிவின் கொடூரத்தை விளக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் ஒரு வீடியோவில், மலையின் ஒரு பெரிய பகுதி மிக அதிவேகமாகச் சரிந்து கீழே நோக்கி வரும்போது, அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் பீதியில் அலறி அடித்துக் கத்தும் சத்தம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாட்டின் முக்கியப் போக்குவரத்து பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகள் கடும் சவாலாக மாறியுள்ளன.
