“என் கூட ஹோட்டலுக்கு வா… உன்னை IAS ஆக்குறேன்..!” பெண் வங்கி ஊழியருக்கு வலைவிரித்த சமாஜ்வாதி கட்சி பிரமுகர்.. போலீசார் நடத்திய அதிரடி வேட்டை..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் கூட ஹோட்டலுக்கு வா… உன்னை IAS ஆக்குறேன்..!” பெண் வங்கி ஊழியருக்கு வலைவிரித்த சமாஜ்வாதி கட்சி பிரமுகர்.. போலீசார் நடத்திய அதிரடி வேட்டை..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி நிர்வாகியான ரஞ்சன் ராஜீவ், ஒரு பெண் வங்கி ஊழியருக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் மதுரா காவல்துறையினரால் அலிகாரில் வைத்து இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் ஊழியரின் தொலைபேசி எண்ணை எப்படியோ பெற்றுக்கொண்ட அந்த அரசியல் பிரமுகர், தினமும் வாட்ஸ்அப்பில் அவருக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். “உங்களது ஆளுமை மிகச் சிறப்பானது, நீங்கள் பார்க்கும் இந்த வங்கி வேலை உங்களுக்குத் தகுதியானது அல்ல; உ.பி-யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் கோட்டாவின் மூலம் உங்களை நேரடியாக ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கிறேன்” என்று கூறி ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.

இதற்குப் பகரமாகத் தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும், தனியாக ஹோட்டலுக்கு வர வேண்டும் என்றும் அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், சில நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் புகார் அளித்ததோடு, சமாஜ்வாதி கட்சி பிரமுகர் தனக்கு அனுப்பிய வாட்ஸ்அப் உரையாடல்களின் ஆதாரங்களையும் சமர்ப்பித்தார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மதுரா தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த ரஞ்சன் ராஜீவை அலிகார் பகுதியில் வைத்து இன்று கைது செய்து அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in