அடேங்கப்பா..! வெறும் ரூ.2,800-க்கு வாங்கிய பழைய ஓவியம்… ஏலத்தில் போன விலை ரூ.13 கோடி..! கலை உலகில் படைக்கப்பட்ட வரலாற்றுச் சாதனை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! வெறும் ரூ.2,800-க்கு வாங்கிய பழைய ஓவியம்… ஏலத்தில் போன விலை ரூ.13 கோடி..! கலை உலகில் படைக்கப்பட்ட வரலாற்றுச் சாதனை..!!

Published

on

அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் பழைய எஸ்டேட் விற்பனை ஒன்றில் வெறும் 30 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,800) வாங்கப்பட்ட பழைய ஓவியம் ஒன்று, சர்வதேச ஏலத்தில் 1.35 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.13 கோடி) விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. மிஷிகன் மாநிலத்தின் கலாமசூ நகரில் வசிக்கும் கலைப் பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவர், பழைய மியூசிக் ரெக்கார்டுகளைத் தேடி சென்றபோது தூசி படிந்து கிடந்த இந்த சிறிய ஓவியத்தை கவனித்தார். ஓவியத்தின் பின்புறத்தில் “அபெர்கிராம்பி” என்ற பெயர் எழுதப்பட்டிருந்ததால் யோசிக்காமல் உடனடியாக அதை 30 டாலர் கொடுத்து வாங்கினார்.

அந்த ஓவியத்தை நிபுணர்களிடம் காட்டி ஆய்வு செய்தபோது, அது சிகாகோவின் புகழ்பெற்ற சர்ரியலிச பெண் ஓவியரான கெர்ட்ரூட் அபெர்கிராம்பி என்பவரால் 1951-ம் ஆண்டு வரையப்பட்ட ‘ஆல்டர்மன் மெரியம்ஸ் ஷெல்ஸ்’ என்ற அசல் ஓவியம் என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 1952-ல் இந்த ஓவியர் தனது மருத்துவ சிகிச்சைக்காக டாக்டர் ஜான் ரெனால்ட்ஸ் என்பவருக்கு இந்த ஓவியத்தை கட்டணமாக கொடுத்துள்ளார். அதன் பிறகு சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஓவியம் எங்குள்ளது என்று தெரியாமல் பொதுவெளியில் யாருடைய பார்வைகளுக்கும் படாமல் மறைந்திருந்தது.

Advertisement

நியூயார்க்கில் உள்ள பிரபல ஏல நிறுவனமான ‘ப்ரீமேன்ஸ்’ மூலம் இந்த ஓவியம் ஏலத்திற்கு வந்தபோது, ஆரம்பத்தில் அதிகபட்சமாக 30,000 டாலர் வரை மட்டுமே ஏலம் போகும் என கணிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் பலரும் போட்டாப்போட்டி போட்டு விலையை உயர்த்தியதால், இறுதியில் 1.35 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.13 கோடி) ஏலம் போனது. இதன் மூலம், ஓவியர் கெர்ட்ரூட் அபெர்கிராம்பியின் கலைப்படைப்புகளிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற புதிய உலக சாதனையை இது படைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in