LATEST NEWS
₹400 கோடி முறைகேடு வழக்கில் திடுக் திருப்பம்..! அன்பில் மகேஷுக்கு எதிராக அப்ரூவராக மாறிய Ex-MLA முத்துக்குமார்..? பரபரப்பு வாக்குமூலம்..!!
₹400 கோடி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவர் அளித்துள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தி.மு.க-வைச் சேர்ந்த அரசகுமார் கூறியதன் பேரிலேயே மாவட்ட வாரியாகச் சென்று தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்ததாக முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் பணப் பரிவர்த்தனை விவகாரம் அன்பில் மகேஷுக்கு முழுமையாகத் தெரியும் என்றும், இந்தச் செயலுக்கு அரசு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்து உதவினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாரின் இந்த வாக்குமூலம், இவ்வழக்கில் கைதாகியுள்ள அன்பில் மகேஷுக்குப் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையில் இந்த வாக்குமூலம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
