CM எச்சரிக்கையையும் மீறி நடக்கும் “டெக்னிக்கல்” ஊழல்… கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் அந்த கருப்பு ஆடு யார்..? பகீர் கிளப்பும் சமூக ஆர்வலர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

CM எச்சரிக்கையையும் மீறி நடக்கும் “டெக்னிக்கல்” ஊழல்… கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் அந்த கருப்பு ஆடு யார்..? பகீர் கிளப்பும் சமூக ஆர்வலர்..!!

Published

on

ஊழலுக்கு எதிராக “தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன்” என்று முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்திருந்த நிலையில், அவரது ஆட்சியிலேயே அதிகாரி ஒருவர் மிகவும் துணிச்சலாகத் தொழில்நுட்ப ரீதியில் ஊழலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த அதிகாரி தனக்குத் தெரிந்த மொத்த வித்தையையும் இறக்கி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் குறிப்பிட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) ஒருவர் மீதே சமூக ஆர்வலர் செந்தில் கண்ணன் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி ஆரம்பத்திலிருந்தே பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றியவர் அல்ல என்றும், வேறு துறையில் கற்றுக்கொண்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி தற்போது இந்தத் துறையில் தந்திரமாக முறைகேடுகள் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்தில், பழைய ஆட்சியின் பாணியைப் போலவே சில அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துக் கொள்வதாகவும் செந்தில் கண்ணன் விமர்சித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த முதன்மை கல்வி அலுவலர் யார் என்பது குறித்த விவரங்கள் அரசியல் மற்றும் கல்வித் துறை வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in