LATEST NEWS
தனியார்மயமாகும் பத்திரப்பதிவுத்துறை ‘ஸ்டார் 3.0’ திட்டம்..? அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பரபரப்பு விளக்கம்..!!
பத்திரப்பதிவுத்துறையில் செயல்படுத்தப்பட உள்ள ‘ஸ்டார் 3.0’ திட்டம் தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாகத் தவறான புரிதலின் காரணமாகவே பத்திர எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘ஸ்டார் 3.0’ என்பது பத்திரப்பதிவுத் துறையின் சேவைகளை மேம்படுத்தும் ஒரு நவீனமயமாக்கல் திட்டம் மட்டுமே என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்களுக்குத் துறையின் சேவைகள் எளிதாகவும் விரைவாகவும் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் முதல் கட்டமாகச் சென்னையில் 2 இடங்கள், கோவையில் 2 இடங்கள் மற்றும் மதுரையில் ஓரிடம் என மொத்தம் 5 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய ‘பிரீமியம் சேவை’ (Premium Service) வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
