LATEST NEWS
“குடும்பச் சொத்தில் 50% சம பங்கு வேணும்” TVS குழுமத்தில் வெடித்த சொத்துப் பிரச்சனை… தந்தை வேணு சீனிவாசனுக்கு மகள் லட்சுமி வேணு அதிரடி நோட்டீஸ்..!!
டி.வி.எஸ் (TVS) குழுமத் தலைவரான வேணு சீனிவாசனிடம், குடும்பச் சொத்தில் சட்டப்படி 50 சதவீதப் பங்கை முறையாக வழங்கும்படி அவரது மகள் லட்சுமி வேணு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது தந்தைக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ், குடும்பச் சொத்துக்களில் மகன்களுக்கு இணையான சம பங்கு மகளுக்கும் உள்ளது என்பதை லட்சுமி வேணு தனது நோட்டீஸில் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் அடிப்படையிலேயே தனக்குரிய 50 சதவீத சொத்துப் பங்கை அவர் கோரியுள்ளார்.
தொழில்துறை வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ள இந்த விவகாரத்தில், லட்சுமி வேணுவின் கோரிக்கைக்கு அவரது தாயாரான மல்லிகா சீனிவாசனும் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
