நள்ளிரவில் கை, கால்களைக் கட்டி … மனைவியின் அந்தரங்க உறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்து படுகொலை செய்த கணவன்… நடந்தது என்ன..? பகீர் கிளப்பும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் கை, கால்களைக் கட்டி … மனைவியின் அந்தரங்க உறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்து படுகொலை செய்த கணவன்… நடந்தது என்ன..? பகீர் கிளப்பும் சம்பவம்..!!

Published

on

சொத்துப் பிரச்சனை காரணமாக மனைவியின் பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாகக் கொலை செய்த கணவனைப் காவல்துறை கைது செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நஸ்ரீன் என்ற பெண், தனது பெற்றோர் மறைவுக்குப் பிறகு தனக்குச் சொந்தமாகக் கிடைத்த மற்றும் தன் சகோதரியிடம் இருந்து வாங்கிய மொத்த ஒரு பிகா நிலத்தையும் தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வைத்திருக்க விரும்பினார். ஆனால், அவருடைய கணவர் இஸ்ரார் அந்த நிலத்தை விற்று பணமாக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியும், கொடுமைப்படுத்தியும் வந்துள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் மீண்டும் இந்த நிலப் பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நஸ்ரீன் நிலத்தை விற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இஸ்ரார், அவரைத் கொடூரமாகத் தாக்கி, கை கால்களைக் கட்டி, மனைவியின் பிறப்புறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Advertisement

கொலைக்கு பின், சடலத்தை ஒரு வாடகை காரில் தனது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்ற இஸ்ரார், நஸ்ரீன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக ஊர் மக்களிடம் நாடகமாடியுள்ளார். ஆனால், இதில் சந்தேகமடைந்த கிராம மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், உண்மை அம்பலமானதைத் தொடர்ந்து கொடூரக் குற்றவாளியான கணவர் இஸ்ராரைக் கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in