“அம்மா என்னை நம்பல..” 13 வயதில் பெற்ற தந்தையால் நேர்ந்த கொடூரம்.. 40 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அதிரடி தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா என்னை நம்பல..” 13 வயதில் பெற்ற தந்தையால் நேர்ந்த கொடூரம்.. 40 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அதிரடி தீர்ப்பு..!!

Published

on

1980-களின் முற்பகுதியில், தனது 13 வயதில் சொந்தத் தந்தையான கிளைவ் சிடாலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டாயக் கருக்கலைப்புக்கும் ஆளாக்கப்பட்ட அலிசன் சிடால் என்ற பெண், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை அவரது தாய் அப்போது நம்ப மறுத்து வீட்டை விட்டு வெளியேற்றியதால், அலிசன் மன அழுத்தத்திற்கு உள்ளாகி போதை பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். பின்னர், 2022-ல் மது பழக்கத்தில் இருந்து விடுபட அவர் சிகிச்சை பெற்றபோது இந்தத் துயரத்தைப் பகிர்ந்ததை அடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில், அலிசனின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, தற்போது 81 வயதாகும் அவரது தந்தை கிளைவ் சிடாலுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பின் மூலம், இத்தனை ஆண்டுகள் தான் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களுக்குத் தற்போது முறையான நீதி கிடைத்துள்ளதாக 60 வயதான அலிசன் சிடால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in