CRIME
“சொன்னதைக் கேட்கலனா செத்துரு…” நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை விடுத்து காதலனுடன் வாழ ஆசை..! பெற்ற மகளின் நெற்றியிலேயே சுட்டுத் தள்ளிய தந்தை.! உலுக்கியெடுத்த பயங்கரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் போகாவ் நகரில் ஒரு தந்தை தனது மகளை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உடன் திருமணம் செய்ய மறுத்ததைக் கண்டித்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஷாஜியா என்ற இளம் பெண் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சைஃபை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர்.
போகாவ் நகரில் வசிக்கும் அஸீன் கான் தனது மகள் ஷாஜியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்திருந்தார். ஆனால், ஷாஜியா தனது நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்குப் பதிலாக வேறு ஒரு இளைஞரை காதலித்து வந்ததோடு, அவருடனேயே நிக்காஹ் செய்ய விரும்பினார். இதனால் தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையைத் திருமணம் செய்ய அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது தொடர்பாகத் தந்தைக்கும் மகளுக்கும் இடையே பலமுறை வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளதுடன், எப்படியாவது தன் காதலனை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று ஷாஜியா உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த தந்தை, ஷாஜியா தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், துப்பாக்கிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் உடனடியாக ஓடிவந்தனர். உடனடியாக காயமடைந்த ஷாஜியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; தற்போது அவர் சைஃபை மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதற்கிடையே, ஷாஜியாவின் தாயார் கெருனிசா அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட தந்தை மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான காரணங்களை அறிய குடும்ப உறுப்பினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
