போலீஸையே மிரளவிட்ட மாஸ்டர் பிளான்..! அடையாளம் தெரியாமல் இருக்க மொட்டை… டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு வழக்கில் சினிமா படத்த மிஞ்சும் திருப்பம்..!! – cinefeeds
Connect with us

CRIME

போலீஸையே மிரளவிட்ட மாஸ்டர் பிளான்..! அடையாளம் தெரியாமல் இருக்க மொட்டை… டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு வழக்கில் சினிமா படத்த மிஞ்சும் திருப்பம்..!!

Published

on

நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கில் போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க மேற்கொண்ட தந்திரங்கள் குறித்து புதிய விவரங்கள் தெரியவந்துள்ளது. குறிப்பாக, முக்கியக் குற்றவாளியான ஹிர்திக், அப்பகுதி மக்கள் தன்னை அடையாளம் காணாமல் இருக்க தனது தலையை முழுமையாக மொட்டை அடித்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஹிர்திக் குமார் என்ற ரோஷன், பீகாரின் பெகுசராய் சேர்ந்தவராவார். மேலும் கைது செய்யப்பட்ட மற்ற இருவரான ரேஹான் மற்றும் பூல் சிங் ஆகியோர் ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்தவர்கள். இந்தத் தாக்குதலுக்கான சதித்திட்டம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே தீட்டப்பட்டுள்ளது. முன்பு நீண்ட முடியுடன் இருந்த ஹிர்திக், அப்பகுதியில் யாரும் தன்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காகவே தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு மொட்டை அடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இந்தச் சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் கூட்டாளியான வெளிநாட்டில் வசிக்கும் கேங்ஸ்டர் அனில் பண்டிட் பொறுப்பேற்றுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு தப்பியோட முயன்ற இந்த மூன்று பேரையும் போலீசார் ராஜஸ்தானின் கோட்டா ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, அவர்களை பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக மும்பைக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in