LATEST NEWS
“அவன் திருடன் இல்ல…” ராம்லீலா பார்த்துட்டு வந்த இளைஞருக்கு கொடூர அடி.. ஒரே ஒரு சந்தேகத்தால் பறிபோன அப்பாவி உயிர்..! பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில், ராம்லீலா நிகழ்வைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த விபின் என்ற இளைஞர் மீது திருடன் எனச் சந்தேகமடைந்து அங்குள்ள கிராம மக்கள் சிலர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்குப் பிறகு உயிரிழந்த விபினின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரது இறப்பிற்கு மாரடைப்பே முதன்மைக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கும் இந்த திடீர் மாரடைப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
